உறவினர் பாலியல் தொல்லை - இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
பெங்களூருவை சேர்ந்த ஐடி ஊழியரான 24 வயது இளம்பெண், தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், 95 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், உறவினரான பிரவீன் சிங் என்பவருடன் இளம்பெண் நெருக்கமாக பழகி வந்ததும், அவருடனான தனிப்பட்ட தருணங்களை பிரவீன் சிங் செல்போனில் பதிவு செய்ததும் தெரியவந்தது. மேலும் சமீபத்தில் வேறொருவருடன் இளம்பெண் பழகி வந்ததால் ஆத்திரமடைந்த பிரவீன் சிங், நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஹோட்டல் அறையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொண்டுள்ளார். இதையடுத்து உடனடியாக பிரவீன் சிங்கை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
