மனைவி மாயமான அதே இடத்தில்.. குழந்தையுடன் குதித்து உயிரை விட்ட சோல்ஜர்

குழந்தையுடன் ஆற்றில் குதித்த எல்லை பாதுகாப்புப் படை வீரர் மாயம்

தனது குழந்தையுடன் எல்லை பாதுகாப்பு படை வீரர், கங்கை ஆற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

உத்தர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசிக்கும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ராகுல், தனது 2 வயது மகன் பிரணவ் உடன் கங்கை ஆற்றில் குதித்து மாயமாகியுள்ளார்..

இதனை தொடர்ந்து அதிகாரிகள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்... கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ராகுலின் மனைவி மனிஷா கங்கை ஆற்றில் குதித்து காணாமல் போன நிலையில், அவரது உடலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலையில் மனைவியின் தற்கொலையால் ராகுல் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் எனவும் அதன் காரணமாக இந்த விபரீத முடிவு எடுத்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com