அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 7 யானைகள்இறப்பு
அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் அதிகாலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக்கூட்டம் மீது, சாய்ரங் - புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதியதில் 7 யானைகள் இறந்தன. இதையடுத்து ரயிலின் 5 பெட்டிகள் மற்றும் எஞ்சின் தடம்புரண்டன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என, வடக்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
Next Story
