September India Rules Changes | `செப்.1 நாளை’ அடியோடு மாறும் ரூல்ஸ்.. கேஸ் சிலிண்டரில் கட்டாகும்
எல்பிஜி சிலிண்டர் விலை, வெளிநாட்டு விமானப் பயணம் மற்றும் வங்கி வைப்புத்தொகை உள்ளிட்ட, முக்கிய விதிமுறைகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன... செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வெளிநாடு செல்லும் பயணிகள், குடிவரவு கவுன்ட்டர்களில் போர்டிங் பாஸில் முத்திரை பெற வேண்டிய அவசியம் இல்லை. மின்னணு அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாஸை காண்பித்தால் போதுமானது... எல்பிஜி இணைப்புக்கான இ-KYC செயல்முறையை முடிக்காதவர்களுக்கு, வீட்டு உபயோக சிலிண்டர் சலுகை விலையில் கிடைப்பதில் கட்டுப்பாடுகள் ஏற்படலாம். இதனால் செப்டம்பர் மாதத்துக்கான எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 3 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை, ஒவ்வொரு பணி நாளும் காலை 10.10 மணிக்குள் வங்கிகள் தங்கள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் ஒரே நாளில், ஒரே தொகைக்கான வைப்புத்தொகைக்கு வெவ்வேறு கிளைகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க முடியாது. வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க இந்த விதி கொண்டுவரப்பட்டுள்ளது...
