Uttarpradesh | கார் கதவுகளில் ரகசிய அறைகள் - கோடிக்கணக்கில் பணத்தை மறைத்து எடுத்துச்சென்ற கும்பல்..
#Uttarpradesh #Money #Crime #ThanthiTV
Uttarpradesh | கார் கதவுகளில் ரகசிய அறைகள் - கோடிக்கணக்கில் பணத்தை மறைத்து எடுத்துச்சென்ற கும்பல்.. உ.பி.யில் பரபரப்பு உத்தரப் பிரதேச மாநிலத்தில், காரின் கதவுகளில் ரகசிய அறைகளை அமைத்து மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 கோடி கணக்கில் வராத பணத்தை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஷாஜஹான்பூரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற காரை, ஹாபூர் மாவட்டம் பில்குவா அருகே உள்ள சஜ்ஜார்சி சுங்கச்சாவடியில் அதிகாரிகள் மடக்கிப் பிடித்துச் சோதனையிட்டனர். அப்போது, காரில் பயணம் செய்தவர்களின் பைகளில் இருந்து முதற்கட்டமாக ரூ.35 லட்சம் பணம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து காரை முழுமையாகச் சோதனை செய்தபோது, அதன் கதவுகளில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரகசிய அறைகளில் மேலும் ரூ.2 கோடியே 65 லட்சம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான உரிய ஆவணங்களையோ விளக்கத்தையோ காரில் இருந்தவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடி தொடர்பான மேல்நடவடிக்கைக்காக வருமான வரித்துறையிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு இந்தப் பெருந்தொகை சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
