வீட்டிற்குள் புகுந்த கடல் நீர்.. தத்தளிக்கும் மக்கள்

x

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் கண்ணமாலை செல்லானம் பகுதியில் கனமழை காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. குறிப்பாக, கண்ணமாலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மார்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தங்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். கடல் சீற்றத்தாலும், கடல் அரிப்பாலும் பெரிதும் பாதிக்கப்படும் இந்த பகுதியில், தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்