

கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ம் தேதி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக, படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 1-ம் தேதி, ஒன்று முதல் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி இன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், வருகிற 15-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை அதிகாரிகளும், சுகாதார பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.