பள்ளியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பள்ளி வளாகத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலதாமதாக சமர்ப்பித்த ப்ராஜெக்டில் (Project) பள்ளி முத்திரையை பதிப்பது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவன் பென்சன் ஆபிரகாம், பள்ளி வளாகத்தில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். மாணவன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், உயிரிழந்த மாணவனின் ஆசிரியர்கள், நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
Next Story
