பள்ளி பேருந்தை தொட்டதும் தீயில் கருகும் பெண்
பள்ளி பேருந்து தொட்டதால் தீயில் கருகிய பெண்...
கலபுருகியில் நடந்த அசம்பாவித சம்பவத்தின் பதற வைக்கும் சிசிடிவி...
கர்நாடகா மாநிலம் கலபுராகி நகரில், பள்ளி பேருந்தில் மகனை ஏற்றியபோது மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்த பெண், மகனும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது
திங்கள்கிழமை காலை 9.20 மணியளவில், 34 வயதான பாக்யஸ்ரீ, களபுருகி நகரின் மோகன் லாட்ஜ் ரோடு பேருந்து நிறுத்தத்தில் தனது மகனை வழக்கம் போல் பள்ளி பேருந்தில் ஏற்றுவதற்காக காத்துக் கொண்டிருந்தார். பேருந்து வந்தவுடன், பாக்யஸ்ரீ தன் மகனை பேருந்துக்குள் ஏற்றிபோது திடீரென்று பாக்யஸ்ரீ மயங்கி கீழே விழுந்தார், மக்கள் என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்வதற்குள், தீப்பொறிகள் பாக்யஸ்ரீ குடலிலிருந்து பறந்ததுடன் சுற்றிலும் புகை கூட தொடங்கியது. அவள் வலியில் உதவிக்காக அலறினாள், அவளுடைய அப்பாவி மகனும் தாயைக் காப்பாற்ற முயன்ற போது காயமுற்றான். காப்பாற்ற சென்ற பொது மக்களின் ஒருவரும் பாக்ய ஸ்ரீ காப்பாற்ற முயன்ற போது தீப்பொறி பறந்தது. பொதுமக்கள் என்ன நடக்கிறது என்று பார்த்தபோதுதான் அவர்களுக்கு ஒரு விவரம் தெரிய வந்தது அந்த பேருந்து மேலே சென்று கொண்டிருந்த மின்சார கம்பியுடன் பேருந்து உரசி நின்று கொண்டிருந்தது. பாக்யஸ்ரீ பஸ்ஸைத் தொட்டபோது, எர்த்டிங் காரணமாக மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. இதை அறிந்த பின்னர் பொதுமக்கள் பேருந்து சற்று முன்னே நகர்த்தக் கூறி தாய் மகன் என இரண்டு பேரையும் விட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாக்யஸ்ரீ சிகிச்சை பெற்று வரும் நிலையில் லேசான காயங்களுடன் அவரது மகனும் சிகிச்சை பெற்று வருகிறார்.
மின்வாரியத்தின் அலட்சியமே இந்த விபத்திற்கு காரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
