ஊழல்வாதிகள் ஒன்றாக இணைந்து எதிர்க்கின்றனர் - பிரதமர் மோடி

ஊழலுக்கு எதிரான தன்னுடைய நடவடிக்கையால் ஆத்திரமடைந்தவர்கள், ஒன்று திரண்டு மகாகத்பந்தன் என்ற பெயரில் தன்னை எதிர்ப்பதாக எதிர்கட்சிகளின் மாநாடு குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
ஊழல்வாதிகள் ஒன்றாக இணைந்து எதிர்க்கின்றனர் - பிரதமர் மோடி
Published on
ஊழலுக்கு எதிரான தன்னுடைய நடவடிக்கையால் ஆத்திரமடைந்தவர்கள், ஒன்று திரண்டு மகாகத்பந்தன் என்ற பெயரில் தன்னை எதிர்ப்பதாக எதிர்கட்சிகளின் மாநாடு குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். தாதர் நகர் ஹவேலியின் சில்வாசா நகரில் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற அவர், இது குறித்து மேலும் பேசுகையில், பொது மக்களின் பணத்தை சுரண்டுவதை, தான் தடுத்து நிறுத்திவிட்டதால் அவர்களுக்கு கோபம் வருவது இயற்கை தான் என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் தன்னை எதிர்க்கவில்லை என்றும் நாட்டு மக்களை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். அவர்கள் முழுமையாக இணையவதற்குள்ளாகவே அவர்களுக்குள் பங்கு சண்டை வரத்தொடங்கி விட்டதாக எதிர்கட்சிகளின் மெகா கூட்டணியை மோடி கடுமையாக சாடினார்.
X

Thanthi TV
www.thanthitv.com