கன்னடம் பேச மறுத்த விவகாரம் - மன்னிப்பு கேட்ட எஸ்.பி.ஐ மேலாளர்
பெங்களூருவில் கன்னடம் பேச மறுத்து, "இந்தியில்தான் பேசுவேன்" என்று கூறி விமர்சனத்திற்கு ஆளான எஸ்.பி.ஐ. கிளை மேலாளர், மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனிடையே, வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் கன்னடத்தில் பேசுவதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, கர்நாடக முதல்வர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில், வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆறு மாதங்களில் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கன்னட அபிவிருத்தி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கன்னடம் கர்நாடக மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக இருப்பதால், வாடிக்கையாளர் சேவைகளில் உள்ள ஊழியர்கள் கன்னடத்தில்தான் பேச வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
