``காப்பாத்துங்க''.. உடல் நொறுங்கி தோழி கோர மரணம்.. கண்முன்னே பார்த்துவிட்டு திரும்பி பார்க்காமல் ஓடிய நண்பர்கள்
கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார பகுதியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற பெண்,13 வது மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரை சேர்ந்த பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் பதிவிடுதற்காக, 13 வது மாடி கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக விடப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, தவறுதலாக கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கோர சம்பவத்தை பார்த்ததும் உடனிருந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
