கடையில் சேலை திருட்டு பெண் மீது கொடூர தாக்குதல்
ஜவுளிக்கடையில நுழைஞ்சி 92 ஆயிரம் ரூபா மதிப்புள்ள சேலைகள திருடின பெண்ண கடையோட உரிமையாளர் சரமாரியா தாக்கிய சம்பவம் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருக்கு... பெங்களூரு அவென்யூ சாலையில் உள்ள துணிக்கடையில் கடந்த 20ம் தேதி பெண் ஒருவர், 61 சேலைகளை திருடியதாக, அதுகுறித்த சிசிடிவி காட்சிகளுடன் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், அப்பகுதியில் நடமாடிய அந்தப் பெண்ணை பிடித்து கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் கொடூரமாக தாக்கினர். இந்நிலையில், இச்சம்பவத்தில் பெண்ணை கைது செய்த போலீசார், பெண்ணை தாக்கிய கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
