சட்டப்பேரவை வளாகத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் திடீர் போராட்டம்... உ.பி யில் பரபரப்பு
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பட்ஜெட் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சட்டப்பேரவை வளாகத்தில் திரண்ட அவர்கள், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர். மஹா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் மரணத்திற்கு நீதி வேண்டும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகரித்துள்ள வேலைவாய்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story
