சைஃப் வழக்கையே புரட்டிய `மீசை'... ``வாழ்க்கையும் போச்சு, கல்யாணமும் காலி..'' - இளைஞர் சொன்ன ஷாக் தகவல்

x

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர், போலீஸ் நடவடிக்கையால் தனது வாழ்க்கை சீர்குலைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஆகாஷ் கனோஜா என்ற ஓட்டுநரை, சத்தீஸ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தை சேர்ந்த ஷரிஃபுல் இஸ்லாமை போலீசார் கைது செய்த நிலையில், கனோஜாவை வீட்டிற்கு செல்ல அனுமதித்தனர். இதனிடையே, போலீசார் தன்னை விடுவித்த போதிலும், தனது வேலைவாய்ப்பு, திருமணம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆகாஷ் கனோஜா வேதனை தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சியில் இருந்த நபருக்கு மீசை இல்லாத நிலையில், தான் மீசை வைத்திருந்ததை மும்பை காவல்துறையினர் கவனிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். வேலை கேட்டு சைஃப் அலிகான் இல்லம் முன்பு காத்திருக்கப் போவதாகவும் கனோஜா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்