சைஃப் கத்திக்குத்து... க்ரைமை விஞ்சும் ட்விஸ்ட்... `அந்த இன்னொருவர்'... தலைசுற்றும் பின்னணி

x

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கத்திக்குத்து சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர் கடந்த 16ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள இல்லத்தில், சைஃப் அலி கான் தாக்கப்பட்ட சம்பவத்தில் பங்களாதேஷை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஷரிபுல் இஸ்லாம், சில நாட்கள் கொல்கத்தாவில் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்த மும்பை போலீசார் மேற்குவங்கம் சென்றுள்ளனர். இதனிடையே, ஷரிபுல் இஸ்லாமுக்கு சிம் கார்டு வழங்கிய குக்மோனி ஜஹாங்கிர் ஷேக் என்பவருக்கும், தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என மும்பை போலீசார் சந்தேகித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்