மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

இந்த ஆண்டு மண்டல பூஜை அடுத்த மாதம் 27 ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன, மண்டல பூஜை முடிந்த பின்பு கோயில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்படும். ஐனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. கோயில் நடை இன்று திறக்கப்படுவதையொட்டி சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடும் என்பதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com