"சபரிமலை போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து

கேரள மக்கள் மதசார்பின்மையை விரும்புவதால், சபரிமலை விவகார போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
"சபரிமலை போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளது" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து
Published on
கேரள மக்கள் மதசார்பின்மையை விரும்புவதால், சபரிமலை விவகார போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலையில் பாஜகவின் போராட்டம் முடிவுற்றதாக தெரிய வந்ததன் மூலம், நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் கேரள அரசின் நிலைபாட்டை அங்கீகரிக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். சபரிமலையில் அடிப்படை வசதியில் பிரச்னை ஏற்பட்டதற்கு சமீபத்தில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளமே காரணம் எனவும் முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com