சபரிமலை ஓராண்டுக்கு சிறப்பு பாதுகாப்பு மண்டலம் - பாதுகாப்பு வளையத்தில் சபரிமலை பகுதிகள்

சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை அடுத்த ஓராண்டுக்கு சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை ஓராண்டுக்கு சிறப்பு பாதுகாப்பு மண்டலம் - பாதுகாப்பு வளையத்தில் சபரிமலை பகுதிகள்
Published on

சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை அடுத்த ஓராண்டுக்கு சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக கேரளா அரசு அறிவித்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி பெண்களை அனுமதிக்க மாட்டோம் என, ஒரு பிரிவினர் கூறியதை அடுத்து, கோவில் வளாகத்தில் பதற்றமான சூழ்நிலையில் ஏற்பட்டது. இதையடுத்து, 2018-ல் சபரிமலை சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்பட்டது. எலவுங்கல் முதல் குன்னாற்றம் வரையான பகுதி வரை, சிறப்பு பாதுகாப்பு மண்டலத்திற்குள் கொண்டுவரப்பட்டது. சபரிமலையில் கடந்த ஆண்டுகளில் இருந்த பாதுகாப்பு பிரச்னை தற்போதும் நீடிப்பதாகவும், மேலும் ஓராண்டுக்கு சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக வைத்திருக்க வேண்டும் என்ற கேரளா போலீசார் அறிவுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற கேரளா அரசு, சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com