சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா மீது தாக்குதல் : மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார்

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா மீது தாக்குதல் : மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார்
சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா மீது தாக்குதல் : மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார்
Published on

சபரிமலைக்கு கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்த , கனகதுர்கா மீது, அவரது மாமியார் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரத்தில்

உள்ள மாமியார் வீட்டிற்கு கனகதுர்கா சென்ற போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, அவரது மாமியார், கடுமையாக தாக்கியதாகவும், இதனால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினரிடம் கனகதுர்கா புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் பெருந்தலமன்னா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகதுர்காவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com