Sabarimalai | Guruvayur | சபரிமலையை தொடர்ந்து குருவாயூரிலும்? - 40 வருசமா இதான் நடந்துட்டு இருக்கா
சபரிமலை தங்க விவகாரத்தை தொடர்ந்து குருவாயூரிலும் முறைகேடு?
கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறாத நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களில் முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி, பாத்திரங்கள், தந்தம் போன்றவை அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், குருவாயூர் தேவஸ்தான புன்னத்தூர் யானைகள் முகாமில் கடந்த 2019-20-ம் ஆண்டு சுமார் 522 கிலோ தந்தம் மற்றும் பொருட்கள் சட்டப்படி வனத்துறையிடம் ஒப்படைக்கப்படாமலும், கோவிலுக்குள் இருக்கும் தங்க கிரீடம், வெள்ளி ஆபரணமாகவும், இரண்டு புள்ளி ஆறு ஐந்து கிலோ வெள்ளி பாத்திரத்துக்கு பதிலாக 750 கிராம் எடையுள்ள வெள்ளி பாத்திரமாகவும் மாற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக தணிக்கை நடைபெறாத நிலையில், பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்திற்கான ரசீதுகள் முறையாக வழங்கப்படவில்லை.. குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்படும் குன்றிமணி மூட்டைகள் மாயமாகியுள்ளன... 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குங்குமப்பூ குறித்த கணக்குகளும் சரிவர நிர்வகிக்கப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
