33 நாட்களில் இத்தனை கோடியா? | புதிய உச்சத்தில் சபரிமலை காணிக்கை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் காணிக்கை மற்றும் அரவணை அப்பம் விற்பனை மூலம் 210 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை மற்றும் அப்பம் விற்பனை மூலம் மட்டும் 106 கோடி ரூபாய் வருவாய் பெறப்பட்டுள்ளது.
மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 33 தினங்கள் ஆன நிலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட அதிக பக்தர்கள் இந்த முறை தரிசனம் செய்துள்ளனர்.
Next Story
