"சபரிமலை ஆபரணங்களை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பான வழக்கு" - விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சபரிமலை ஆபரணங்களை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"சபரிமலை ஆபரணங்களை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பான வழக்கு" - விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
Published on

சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு, ஆண்டுதோறும் பந்தளராஜா குடும்பத்தின் பாதுகாப்பில் உள்ள திருவாபரணம் எனப்படும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுவது வழக்கம். இந்த விழாவுக்கு பிறகு ஆபரணங்கள் அனைத்தும் மீண்டும் பந்தளராஜா குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும். ஆனால் இந்த ஆபரணங்கள் பாதுகாப்பு தொடர்பாக பந்தளராஜா குடும்பத்தில் பிரச்சினை எழுந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. கடவுளுக்கு ஒருமுறை அளித்த ஆபரணங்கள் எப்படி தனி ஒரு குடும்பத்துக்கு சொந்தமாகும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆபரணங்களை உரிமை கொண்டாடுவதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள அரசிடம் ஆலோசனை பெற்று பதிலளிக்குமாறு மாநில வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தாவுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com