

இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 9 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை 9 பேர் கொண்ட நீதிபதிகள் விசாரிக்கலாமா என்பது தொடர்பாக வியாழக்கிழமை முடிவு செய்யலாம் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் வாதிடுவது தொடர்பாக நேரம் ஒதுக்குவது குறித்தும் வியாழக்கிழமை முடிவு செய்யலாம் என்றும் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.