Sabarimala | Ayyappan | Train | ஐயப்ப பக்தர்களுக்கு ஓர் அறிவிப்பு - இனி இதை செய்தால் கடும் தண்டனை

x

ஐயப்ப பக்தர்கள் ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றுவதற்கு தெற்கு ரயில்வே முற்றிலும் தடை விதித்துள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்

ரயில் அல்லது ரயில் நிலைய வளாகத்திற்குள் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டுமென தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.

பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வளாகத்தில் கற்பூரம், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

மீறுவோர் ரயில்வே சட்ட விதிகளின் கீழ் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஐயப்ப பக்தர்களும் ரயில்வே ஊழியர்களுடன் ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்