Sabarimala Aravana| சபரிமலைஅரவணை, அப்பம் விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்

சபரிமலைஅரவணை, அப்பம் விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்

சபரிமலையில் அரவணை, அப்பம் பிரசாதத்தில் ரூ.8.8 லட்சம் முறைகேடு! ​ சபரிமலை ஐயப்பன் கோயிலில் கெட்டுப்போகாத அரவணை மற்றும் அப்ப பிரசாதங்களை சேதமடைந்ததாக போலி கணக்கு காட்டி, 8.8 லட்ச ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மண்டல-மகரவிளக்கு காலத்தில் பிரசாத தட்டுப்பாடு நிலவியபோதே அரவணை, அப்ப பிரசாத மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெட்டுப்போனதாகக் கணக்கு காட்டப்பட்டு அழிக்கப்பட்ட 7,594 அரவணை டின்கள் மற்றும் 2,697 அப்ப பாக்கெட்டுகள் ஆய்வின்போது கிடைக்கவில்லை என தேவஸ்வம் விஜிலென்ஸ் தெரிவித்துள்ளது. ​மேலும், சில குறிப்பிட்ட நபர்களுக்கு பிரசாதங்களை இலவசமாக வழங்கிவிட்டு, அவற்றைச் சேதமடைந்த கணக்கில் காட்டியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபரிமலை தேவஸ்வம் சிறப்பு கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

#sabarimala #aravana #appam #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com