Dog Bite | Kovalam | திடீரென ரஷ்ய பெண் காலில் கவ்விய தெருநாய்.. கோவளத்தில் அதிர்ச்சி
கேரள மாநிலம் கோவளம் கடற்கரையில் தெரு நாய் கடித்து ரஷ்ய நாட்டு பெண் சுற்றுலா பயணி காயமடைந்தார். திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள கோவளம் கடற்கரையில் நடந்து சென்ற ரஷ்யாவை சேர்ந்த பவுலினாவை திடீரென அங்கு சுற்றிதிரிந்த தெரு நாய் ஒன்று காலில் கடித்துள்ளது. இதில் காயமடைந்த அவரை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை 3 பேரை தெருநாய்கள் கடித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
