Russia | USA | "இந்தியாவை எதுவும் பண்ண முடியாது.."சீண்டும் அமெரிக்கா- என்ட்ரி கொடுத்த நண்பன் ரஷ்யா
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் ஒருபோதும் பலனளிக்காது என,
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் Sergey Lavrov தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை கடுமையாக எதிர்த்து வரும் அமெரிக்கா, இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,
இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் பயனற்றது என்பது நிரூபணமாகி வருவதாக தெரிவித்தார். இரண்டு பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள் மீது அழுத்தம் கொடுக்கும் தந்திரங்களைப் பயன்படுத்துவது பயனற்றது என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளதாகவும், இந்தியாவிடம் அதிபர் டிரம்ப் தற்போது கடைபிடிக்கும் மென்மையான அணுகுமுறை இதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் செர்ஜி லாவ்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.
