Russia | India | "ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர வேண்டாம்" - வெளியுறவு அமைச்சகம்
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர வேண்டாம் என்று வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வாராந்திர செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது, ரஷ்ய ராணுவத்தில் தற்போது 27 இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றும், அவர்களின் குடும்பங்களுடன் இந்திய அரசு தொடர்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிய சலுகைகள் வழங்கப்பட்டாலும், அவை உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்றும், அத்தகைய வலையில் விழுந்து விடாமல் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Next Story
