Rupee Fall | `ரூபாய்’ மதிப்பு வரலாறு காணா வீழ்ச்சி
#rupee #rupeefall இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்ததால் பணவீக்கம் ஏற்பட வாய்ப்பு சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 44 காசுகளாக குறைந்து வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை தாண்டியதும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்று வெளியேறியதும் இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. சர்வதேச சந்தையில் டாலர் குறியீடு 98.36 ஆக உயர்ந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் வீழ்ச்சி ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பெட்ரோல், டீசல் மற்றும் மின்னணுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதால், வரும் நாட்களில் பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
