மைசூரில் 3 பேர் தற்கொலை - சூதாட்டத்தால் சீரழிந்த குடும்பம்

x

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்தவர்கள், மைசூர் யரகனஹள்ளியைச் (Mysore Yaraganahalli) சேர்ந்த ஜோஷி அந்தோணி, அவரது தம்பி ஜோபி அந்தோணி மற்றும் ஜோபி - சர்மிளா தம்பதி ஆகிய 3 பேர் எனத் தெரியவந்தது. கணவன் மனைவி இருவரும் Online மற்றும் IPL சூதாட்டத்தில் ரூ.80 லட்சம் வரை இழந்தனர். பின்னர், கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஜோஷி, தனது இறப்புக்கு காரணம் தனது தம்பியும், அவரது மனைவியும் தான் என வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்தார். பின் இதனால், மனமுடைந்த ஜோபி - சர்மிளா தம்பதியும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்