ஏர்போர்ட்டில் சிக்கிய ரூ.7 கோடி.. அதிகாரிகளை அதிரவிட்ட அந்த Dress
ரூ.7 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கேரளாவை சேர்ந்த இருவர் கைது
சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு விமானத்தில் 7 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 6.7 கிலோ எடையுடைய உயர் ரக கஞ்சாவை கேரளாவை சேர்ந்த பஹத் மோன் முஜீப் மற்றும் சுஹைல் ஆகியோர் உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவர்களிடம் இருந்த 7 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
