நடிகர் பிரபு வீட்டின் முன் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்

சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் பிரபுவின் வீட்டின் முன்பு, கடந்த 12-ஆம் தேதி கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
நடிகர் பிரபு வீட்டின் முன் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்
Published on
சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் பிரபுவின் வீட்டின் முன்பு, கடந்த 12-ஆம் தேதி கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் அந்த வழியாக சென்ற ஒருவரை, மிரட்டி அவரிடம் இருந்த தங்க நகைகளை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதையடுத்து, நடிகர் பிரபுவின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, கொள்ளையர்கள் நகையைப் பறிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com