போலீஸ் மீது காரை மோதிவிட்டு தப்பிய கொள்ளையர்கள்.. ட்ரோன் உதவியுடன் தேடும் போலீஸ்
ஆந்திர மாநிலம், சித்தூரில் சோதனைச் சாவடி வழியாக தப்பிச் சென்ற வடமாநில கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குப்பம் பகுதியில் வடமாநில கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், தம்பிகானி பள்ளி சோதனைச் சாவடி வழியாக கொள்ளையர்கள் வந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கொள்ளையர்கள் காரை நிறுத்தாமல், போலீசார் மீது மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஓட்டுநரின் காலில் குண்டு பாய்ந்த நிலையிலும், அவர்கள் காரை நிறுத்தி, விட்டு தப்பிச் சென்று விட்டனர். அந்த காரை கைப்பற்றிய போலீசார், வனப்பகுதிக்குள் தப்பியோடிய கொள்ளையர்களை ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் தேடி வருகின்றர். மேலும், குண்டு காயத்துடன் யாரேனும் மருத்துவமனைக்கு வந்தால் தகவல் அளிக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story
