Road Accident | Student | பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது மோதிய பேருந்து.. அதிர வைக்கும் காட்சி
Road Accident | Student | பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது மோதிய பேருந்து.. அதிர வைக்கும் காட்சி
Road Accident | Student | பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது மோதிய பேருந்து.. அதிர வைக்கும் காட்சி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட குந்தமங்கலம் பகுதியில், பள்ளி குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.. முதலில் அதனை பார்க்கலாம்... பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு மினி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோ சாலையில் திரும்ப முயன்ற போது, அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 12 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். தனியார் பேருந்தில் முன்புறமாக உள்ள கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
