வதோதராவில் சாலை விபத்து - ரோடு ரோலர் இயந்திரம் ஏறி இளம்பெண் உயிரிழப்பு

வதோதராவில் சாலை விபத்து - ரோடு ரோலர் இயந்திரம் ஏறி இளம்பெண் உயிரிழப்பு
Summary

வதோதராவில் சாலை விபத்து - ரோடு ரோலர் இயந்திரம் ஏறி இளம்பெண் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் வதோதராவில் இருசக்கர வாகனம் வழுக்கி விழுந்த விபத்தில்19 வயது இளம்பெண் ரோடு ரோலர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வதோதரா தாண்டல்ஜா பகுதியில், இருசக்கர வாகனத்தில் 3 இளம்பெண்கள் சென்று கொண்டிருந்தபோது, மழையால் சாலை வழுக்கி சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்த ரோடு ரோலர் வாகனம், ஒரு இளம்பெண் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்ற இரு பெண்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com