Train Ticket Price | உயரப்போகும் டிக்கெட் ரேட்? - ரயில் பயணிகளே கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க
நாடு முழுவதும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஏசி வகுப்பு கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏசி அல்லாத மெயில் எக்ஸ்பிரஸ் கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், இரண்டாம் வகுப்பில் 500 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட பயணத்திற்கான கட்டணங்கள் கிலோ மீட்டருக்கு பூஜ்ஜியம் புள்ளி 5 பைசாவும் அதிகரிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. அதேசமயம், புறநகர் மற்றும் மாதாந்திர டிக்கெட் கட்டணத்திலும், சாதாரண மற்றும் இரண்டாம் நிலை வகுப்புக்கான பயணக் கட்டணங்களிலும் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. இதற்கு முன் 5 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2020-ல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
