ஹோட்டலில் ரகளை - போலீஸ் ஸ்டேஷனில் வாக்குவாதம்..`ஜெயிலர்' பட வில்லன் நடிகர் கைது
கேரள மாநிலம் கொல்லத்தில் நட்சத்திர விடுதியில், ரகளையில் ஈடுபட்டதாக, ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ரகளையில் ஈடுபட்டு பிரச்சினைகளில் சிக்கிய நடிகர் விநாயகன், தற்போது நட்சத்திர விடுதியில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு பெண்மணிக்கும் அவர் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் விநாயகனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்த போலீசாருடனும் விநாயகன் தகராறில் ஈடுபட்டார்.
Next Story
