பிரதமர், குடியரசு தலைவர் படங்களை பயன்படுத்த கட்டுப்பாடு : வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால் அபராதம்

பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரின் புகைப்படங்களை, வர்த்தக விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர், குடியரசு தலைவர் படங்களை பயன்படுத்த கட்டுப்பாடு : வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினால் அபராதம்
Published on

பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரின் புகைப்படங்களை, வர்த்தக விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் முன்வரைவில், முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மறுமுறை தவறு செய்தால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதத்துடன் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தேசியக் கொடி, அசோக சக்கரம், நாடாளுமன்ற முத்திரை, உச்சநீதிமன்ற முத்திரை ஆகியவற்றை தவறாக பயன்படுத்துவோர் மீது 500 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com