வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட உணவகம்
ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அந்த பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல உணவகம் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது... ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மணாலியில் கனமழை பெய்து, பியாஸ் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால், அப்பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல உணவகம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, முகப்பு சுவர் மட்டுமே எஞ்சியிருந்தது.
இதனையடுத்து, அந்த வழியாக பயணம் செய்யும் பயணிகள் எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Next Story
