விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் திட்டம் - உச்சநீதிமன்றம் அதிரடி
சாலை விபத்துகளில் வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் நபர்களை மீட்க உதவும் ஏற்பாடுகளைக் கொண்ட திட்டங்களை, 6 மாதங்களுக்குள் வகுக்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளுக்குநாள் அதிகரிக்கும் விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் வாகன ஓட்டுநர்களின் பணி நேரத்தை தீர்மானிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஆலோசனை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Next Story
