கனமழை காரணமாக கேரளாவின் கொச்சி நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்குள்ள மக்கள் வீடுகளை இழந்து கண்ணீருடன் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு படையினரும், தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அங்கு இருக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.