இறந்ததாக நினைத்து கதறிய உறவினர்கள் - திடீரென உயிருடன் வந்த மூதாட்டி
கேரளாவில் 68 வயது மூதாட்டி கிணற்றில் விழுந்து இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், அவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு மாவட்டம் கூட்டநாடு, கோத்த சிறாவில் தாட்சாயினி என்ற மூதாட்டியை காணவில்லை எனத் தேடிவந்த நிலையில், அவர் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்திருந்தது, தெரியவந்தது. இதில் மூதாட்டி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், உயிருடன் இருந்த நிலையில் மூதாட்டியை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தற்போது மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
Next Story
