ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தலகோனா வனப்பகுதியில் 749 கிலோ எடை கொண்ட 21 செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக, திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வனத்துறையினரை பார்த்ததும் செம்மர கட்டைகளை போட்டு தப்பியோடிய மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.