செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை
Published on
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜம்பேட்டை வன அலுவலகத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், ஜன்னல் கம்பியை உடைத்து தப்பினர். இதையடுத்து அவர்கள் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், ராஜம்பேட்டை வனப்பகுதிகளில் பதுங்கியிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 47 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிக்கிய 7 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com