2-18 வயதுடையவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு பரிந்துரை

2-18 வயதுடையவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு பரிந்துரை - பரிசோதனைகள் முடிந்த நிலையில் ஒப்புதல்
2-18 வயதுடையவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு பரிந்துரை
Published on

2-18 வயதுடையவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு பரிந்துரை - பரிசோதனைகள் முடிந்த நிலையில் ஒப்புதல்

2 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு செலுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதன் மீதான பரிசோதனைகள் டெல்லி மற்றும் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் முடிந்த நிலையில், அதன் முடிவுகள் கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறுவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும்படி மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் ஓரிரு நாட்களில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com