"RDX வெடிகுண்டுகள் வெடிக்கும்" ஒற்றை மின்னஞ்சலால் பரபரப்பு
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மின்னஞ்சலில், "இன்று மாலை 3 மணிக்குள் அலுவலகங்களை காலி செய்ய வேண்டும். இல்லையெனில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள RDX அடிப்படையிலான வெடிகுண்டுகள் வெடிக்கும். இது சவுக்கு சங்கர் மற்றும் ஜமேஷ் முபீனை நினைவுகூரும் தாக்குதலாகும்" என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும், வெடிகுண்டுகள் CEG கிண்டி மெக்கானிக்கல் துறையில் உருவாக்கப்பட்ட ஃபியூசிங் அமைப்புகளை கொண்டு செயற்கையாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது இறைவனுக்காக நடைபெறும் தியாகமான செயல் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்த மின்னஞ்சல் வந்ததையடுத்து, அலுவலகத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் டாக்டர் பி.டி.கவிதா தலைமையில், குண்டு நிபுணத்துவ குழு விரைந்து வந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதனை நடத்தினர்.
மின்னஞ்சலில், சில அரசியல் தொடர்புடைய நபர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டு, மேலும் ஒரு பிங்க் கன்வலோப்பில் ஆவணங்கள் உள்ளன என்றும், சில வழக்குகளை விலக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
