ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை - டெல்லி துணைநிலை ஆளுநர் அதிரடி

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை - டெல்லி துணைநிலை ஆளுநர் அதிரடி
Published on

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை - டெல்லி துணைநிலை ஆளுநர் அதிரடி

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை, எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் கொரோனா நிலவரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், 2 டி.ஜி. மருந்து பொடியின் இருப்பை உறுதி செய்யவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், பிற கட்டமைப்புகளை ஏற்படுத்த, ஒரு கால வரம்பை உடனடியாக நிர்ணயம் செய்ய உத்தரவிட்ட அவர், கொரோனா தொற்றை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை எக்காரணம் கொண்டும் குறைக்கக்கூடாது எனவும் ஆளுநர் அனில் பைஜல் உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com