ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா
Published on
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம், விரால் ஆச்சர்யா பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிவதற்கு 6 மாதங்கள் உள்ள நிலையில் அவர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரால் ஆச்சர்யா நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்விப்பணியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம், ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், தமது பதவியை ராஜினாமா செய்தபோதே , விரால் ஆச்சர்யாவும் பதவி விலகுவார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com