Ratan Tata Death Anniversary | இந்திய வர்த்தகத்தின் 'டைட்டன்' ரத்தன் டாடாவின் நினைவு தினம்

x

இந்திய வர்த்தகத்தின் 'டைட்டன்' ரத்தன் டாடாவின் நினைவு தினம் இந்திய வர்த்தகத்தின் 'டைட்டன்' என்று அழைக்கப்பட்ட ரத்தன் டாடாவின் நினைவு தினமான இன்று நாடே அவரை நினைவு கொள்கிறது. டாடா குழுமத்தை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக வழி நடத்தியதிலும், இந்திய வணிகத்தின் மீதான உலகளாவிய பார்வையை மாற்றி அமைத்ததிலும் ரத்தன் டாடாவின் பங்களிப்பு இன்றியமையாதவை.தனது தலைமையின் கீழ் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு பத்து மடங்குக்கும் அதிகமாக உயர்ந்த போதிலும், ஒரு போதும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் ரத்தன் டாட்டா இடம்பெற்றதில்லை. காரணம் அவரது செல்வத்தின் பெரும் பகுதி டாடா அறக்கட்டளைக்கு சொந்தமானவை.இப்படி உதவும் கரங்களுக்கு சொந்தக்காரரான ரத்தன் டாட்டா நாய்களிடம் கொண்டிருந்த அலாதி பிரியமும் உலகறிந்த ஒன்று. மும்பையில் இருக்கும் டாடா தலைமை அலுவலகமான பாம்பே ஹவுஸுக்கு ரத்தன் டாடா வரும்போதெல்லாம் அவரது கால்களைச் சுற்றி கொள்ளும் தெரு நாய்கள்...எளிமையின் மறு உருவமாக வாழ்ந்து மறைந்த ரத்தன் டாடா மிக பெரிய மனசுக்கு சொந்தக்காரரும் கூட....தனது வீட்டு வேலையாட்கள், சமையல்காரர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர், செல்லப் பிராணி, நண்பர் என அனைவரது பெயரிலும் உயில் எழுதி வைத்திருந்ததே இதற்குச் சான்று...


Next Story

மேலும் செய்திகள்